எனக்கு என்ன பிடிக்கும்?

தொலைக்காட்சிகளில் வரும் டாக் ஷோக்கள் எனக்கு மிகுந்த அலர்ஜி உண்டாக்கக்கூடியவை. நினைவு தெரிந்து எந்த ஒரு டாக் ஷோவையும் நான் முழுக்கப் பார்த்ததில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த டாக் ஷோக்களில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அநியாயத்துக்கு செயற்கையாகப் பேசுகிறார்கள். அராஜகத்துக்கு ஓர் அளவே இல்லாதபடிக்குத் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். புருஷன் பெண்சாதிச் சண்டைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இதுவெல்லாம் கூடப் பரவாயில்லை. வீட்டில்கூட அப்படிக் கொஞ்சிக்கொள்ள மாட்டார்கள்; கேமரா முன்னால் கொஞ்சிக் கூத்தடிக்கவும் இவர்கள் … Continue reading எனக்கு என்ன பிடிக்கும்?